திருவாரூரில், தொழிலாளர்கள் ஊர்வலம்


திருவாரூரில், தொழிலாளர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 2 May 2022 12:15 AM IST (Updated: 2 May 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

மே தினத்தையொட்டி திருவாரூரில் தொழிலாளர்கள் ஊர்வலம் சென்றனர்.

திருவாரூர்:-

மே தின விழாவையொட்டி திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து நகராட்சி சி.ஐ.டி.யூ. நகராட்சி துப்புரவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். துப்புரவு ஊழியர் சங்க தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக நகராட்சி அலுவலகம் வந்தது. இதையடுத்து சங்க கொடி ஏற்றப்பட்டது. இதேபோல் தொ.மு.ச. சார்பில் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, மருத்துவக்கல்லூரி, மின் வாரிய அலுவலகம், டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. இதில் தொ.மு.ச. மாவட்ட நிர்வாகி தமிழரசன், நிர்வாகிகள் ஜான்பிரிட்டோ, கலைச்செல்வன், ராஜாஜி தமிழரசன், முகமது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். 
குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்த மே தின விழாவுக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி கொடியேற்றி வைத்தார். இதேபோல் அகர ஓகை ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் தலைவர் ராஜீவ் காந்தி சங்கத்தின் கொடியினை ஏற்றினார். குடவாசல் தண்டலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் சுந்தரி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் அமுதா ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் லட்சுமி கலந்துகொண்டு கொடியினை ஏற்றி வைத்தார்.

Next Story