செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை திருவிழா
செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குடும்பத்தினருடன் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உடன்குடி:
செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குடும்பத்தினருடன் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சித்திரை திருவிழா
உடன்குடி அருகே செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.30-ந் தேதி இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் பகல் 12 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, பகல் 1.30 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு, நள்ளிரவு 3 மணிக்கு மேக்கட்டி பூஜை நடந்தது. நேற்று முதல் மே 5-ந் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைபட கச்சேரி, நகைச்சுவை பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அன்னமுத்திரி பிரசாதம்
வரும் மே. 6-ந்தேதி பகல் 11 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும், தொடர்ந்து மாலை 4 மணிக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பிரசாதம் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். இவ்வாறு வாங்கிச் செல்லும் அன்னமுத்திரி பிரசாதத்தை காய வைத்து தினமும் தங்கள் வீடுகளில் சமைக்கும் சாப்பாட்டில் சேர்ப்பார்கள். எனவே அன்னமுத்திரி பிரசாதம் வாங்க தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து குவிந்துள்ளனர். வரும் மே.7-ந் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா தொடங்கியதையொட்டி ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கோவிலில் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்,
ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் வெங்கடேஷ், தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் சாந்திதேவி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story