கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு: கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 330 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் தமிழக இணைய கல்விக் கழகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு “குறளோவியம்“ என்ற பெயரில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி செயின்ட் லசால் மேல்நிலைப்பள்ளி மாணவன் சந்தோஷ்குமார், ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கரவெங்கடேசுவரி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரம்யா, ஸ்வர்ணபிந்தா, கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தனுஸ்ரீ, கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மோனிஷா ஆகிய 6 பேர் உள்பட மொத்தம் 365 பேர் வெற்றி பெற்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கும் தலா ரூ.1000 ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
காசோலை
இதே போன்று நெடுஞ்சாலைத் துறையில் பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள், கலை பண்பாட்டுதுறை சார்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 17 முதல் 35 வயது வரையில் உள்ள மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு காசோலைகளையும், நரிக்குறவர் இன மக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, ஒரு நபருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
நிகழ்சசியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் லேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story