ஊசிமலை காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கூடலூரில் ஊசிமலை காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் வருைக அதிகரித்துள்ளது.
கூடலூர்
கூடலூரில் ஊசிமலை காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் வருைக அதிகரித்துள்ளது.
ஊசிமலை காட்சிமுனை
கூடலூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அடுத்தபடியாக ஊசிமலை காட்சிமுனை உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும்போது ஊசிமலை காட்சிமுனையை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்து காணப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கோடைகாலம் தொடங்கி விட்டதால் குளுகுளு சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கூடலூர் ஊசிமலை காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
பாதுகாக்க முன்வர வேண்டும்
கடந்த 3 நாட்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வந்து சென்றுள்ளனர். இதனிடையே ரம்ஜான் பண்டிகை இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முதுமலை, ஊசிமலை, பைக்காரா அணை, படகு இல்லம், சூட்டிங் மட்டம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை, நாடுகாணி தாவரவியல் பூங்கா, ஊசிமலை, பைக்காரா, சூட்டிங் மட்டம் ஆகிய இடங்கள் வனத்துறைக்கு சொந்தமானது. சுற்றுலா வரும் பயணிகள் இயற்கையை கண்டு ரசிப்பதுடன், அதை பாதுகாக்கவும் முன்வர வேண்டும். மேலும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story