சர்வதேச நீர்வள பாதுகாப்பு கருத்தரங்கு
சர்வதேச நீர்வள பாதுகாப்பு கருத்தரங்கு
ஊட்டி
ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவனம், கோழிக்கோட்டில் உள்ள மத்திய நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவை சார்பில் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மண் மற்றும் நீர்வள பாதுகாப்பின் உத்திகள் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. இதில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, நீலகிரி மாவட்ட வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கட கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவன இயக்குனர் மது கலந்துகொண்டு பேசினார். மேலும் மண் வளம், நீர் ஆதாரம் மற்றும் பயிர் உற்பத்தி ஆகியவற்றின் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், மாநில வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானிகள் கண்ணன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story