காரை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
காட்டுயானைகள் உலா
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பிஞ்சுகள் காய்க்க தொடங்கி உள்ளன. இதற்கிடையில் சமவெளி பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கிருந்து காட்டுயானைகள் வெளியேறி குஞ்சப்பனை பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்த காட்டுயானைகள் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கூட்டமாகவும், தனியாகவும் உலா வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளின் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது.
காரை தாக்கியது
குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே காட்டுயானை ஒன்று வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் தங்களது காரை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். ஆனாலும் மிரண்டுேபான காட்டுயானை, அந்த காரை நோக்கி ஓடி வந்தது. தொடர்ந்து காரின் முன்பகுதியை துதிக்கையால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் பீதியில் உறைந்தனர். மேலும் காரை பின்னோக்கி இயக்கினர். இதனால் காரை தொடர்ந்து காட்டுயானை தாக்கவில்லை. சிறிது நேரம் சாலையில் நின்றுவிட்டு, அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story