தேனி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனை
தேனி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீசார் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முக்கிய இடங்களில் போலீசார் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினர். இதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான தனிப்படையினர் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அணைகள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மோப்பநாய் வீரா உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடனும் வெடிகுண்டுகள் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் அவர்கள் சோதனை நடத்தினர். இதுபோல சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் போடி, உத்தமபாளையம், கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், அணைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story