ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும் - திலீப் வல்சே பாட்டீல் எச்சரிக்கை
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேசிய ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை,
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேசிய ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிபெருக்கி விவகாரம்
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே உறுதியாக உள்ளார். ஒலிபெருக்கிகளை நீக்காவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவுரங்காபாத்தில் நடந்த கூட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சாதி அரசியல் நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படும்
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூகத்தில் பிளவையும், வெறுப்புணர்வையும் உருவாக்கும் முயற்சியாக இருந்தது. இதுகுறித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜ் தாக்கரேவின் பேரணிக்கு அனுமதி வழங்கியபோது போலீசார் விதித்த நிபந்தனைகள் என்ன என்பதை அவுரங்காபாத் போலீசார் ஆய்வு செய்வார்கள்.
அவுரங்காபாத் போலீஸ் இதுகுறித்த அறிக்கையை அனுப்புவார்கள். இதுகுறித்து நாளை(இன்று) உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். அதற்குள் அறிக்கையை பெறுவோம்.
இதன்படி அரசு மேற்கொண்டு முடிவெடுக்கும். அதுவரை மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story