சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு முறைகேடு பா.ஜனதாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது- எச்.விஸ்வநாத் எம்.எல்.சி பேட்டி


சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு முறைகேடு பா.ஜனதாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது- எச்.விஸ்வநாத் எம்.எல்.சி பேட்டி
x
தினத்தந்தி 2 May 2022 9:39 PM IST (Updated: 2 May 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மைசூரு:

 எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பேட்டி

மைசூருவில் பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநிலத்தில் மென்மையான அரசியல் செய்து வருகிறேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். இது ஒரு முதல்-மந்திரி கூறும் வார்த்தை அல்ல. ஆட்சி நடத்துவதில் மென்மை, கடுமை என்று எதுவும் இல்லை. மென்மையான ஆட்சியை மக்கள் மீதும், கடுமையான ஆட்சியை கலவரத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள அமைப்பினர் மீதும் காட்டுங்கள். 

ஒவ்வொரு நாளும் மாநில அரசுக்கு அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு அரசுக்கு அவப்பெயரை கொண்டு வந்துள்ளது. இதில் முறையான விசாரணை நடத்தவேண்டும். 

 வாரிசு அரசியல்

கலபுரகியில் மட்டுமே விசாரணை நடத்த கூடாது. போலீஸ் துறையில் பலருக்கு இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது மாநில அரசின் கடமை. பி.எல்.சந்தோஷ், மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியிருப்பது ஏற்று கொள்ளதக்கது தான். ஏனென்றால் பிரதமர் மோடியே வாரிசு அரசியல் கூடாது என்று கூறியுள்ளார்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story