கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்


கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 May 2022 9:51 PM IST (Updated: 2 May 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக கலெக்டர் மனுக்களை பெற்றார். கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 204 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

பணி நியமன ஆணை

திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பென்னகர் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த அன்பரசு பணியின் போது மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது மனைவி வேண்டா என்பவருக்கு கருணை அடிப்படையில் நெமிலி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தற்காலிக இரவு காவலர் பணிக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சேகர், துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, இளவரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.



3 காலம்.

Next Story