சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்


சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 10:01 PM IST (Updated: 2 May 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாலை பணியாளர்கள் சங்க வட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வேம்பையன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் உதயகுமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி வேதாரண்யம் நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளார் வேதரெத்தினம் நன்றி கூறினர்.


Next Story