மே தின கிராம சபை கூட்டம்
நாகை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது.
சிக்கல்:
நாகை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
கீழ்வேளூர் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் வண்டலூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், ஒன்றிய கவுன்சிலர் ரெங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெண்மணியில் ஊராட்சி மன்ற தலைவர் மகாதேவன் தலைமையிலும், கோகூரில் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், அகரகடம்பனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், ராதாமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீீவா தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
38 ஊராட்சிகளில் நடந்தது
இதேபோல 38 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வருவாய் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல்
இதேபோல் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையிலும், குத்தாலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமையிலும், நரிமணத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமையிலும், திருமருகலில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையிலும், உத்தமசோழபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
நாகை வட்டாரத்தில் 29 கிராம ஊராட்சிகளில் மேன தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பொரவச்சேரி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூடத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம பொதுமக்கள் கொண்டனர். செம்பியன் மகாதேவி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.
வேதாரண்யம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு விவரங்களை பிளக்ஸ் பேனர் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் அரசினால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், பணிகள் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. செம்போடையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி ஆணையர் அண்ணாதுரை, புஷ்பவனத்தில் நடந்த கூட்டத்தில் ஆணையர் சுவாமிநாதன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---
Related Tags :
Next Story