திரளான பக்தர்கள் பால் குட ஊர்வலம்
பிரதாபராமபுரம் மழைமுத்து மாரியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் பழமை வாய்ந்த மழைமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பால்குட விழா நடந்தது. முன்னதாக பிரதாபராமபுரத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து கொண்டும், பச்சைகாளி, பவளகாளி, நடன காளி, பார்வதி, சிவன் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் வேடமணிந்த நடனக்கலைஞர்களும் ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
---
Related Tags :
Next Story