அரிச்சந்திரா நதி வடகரை சாலை சீரமைக்கப்படுமா?


அரிச்சந்திரா நதி வடகரை சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 2 May 2022 10:04 PM IST (Updated: 2 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

சின்ன குருவாடி பாலம் முதல் மஞ்சவாடி பாலம் வரை அரிச்சந்திரா நதி வடகரை சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோட்டூர்;
சின்ன குருவாடி பாலம் முதல் மஞ்சவாடி பாலம் வரை அரிச்சந்திரா நதி வடகரை சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
புதிய சாலை அமைக்கப்படவில்லை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே அரிச்சந்திரா நதி வடகரையில் விக்கிரபாண்டியம் ஊராட்சியை சேர்ந்த கிராந்தோப்பு, அக்கரைத்தெரு,  பாலத்தடிதெரு, ஜீவாதெரு, ஆலத்தூர் ஊராட்சி மஞ்சவாடி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களுக்கு தார்சாலை போடப்பட்டிருந்தது.  அரிச்சந்திரா நதி தூர்வாரும் பணியின் போது இந்த சாலைகள் அகற்றப்பட்டு விட்டது. அதன் பிறகு இது வரை புதிய தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் தூர்வாரி போட்ட மண் சாலையில் சென்று வருகிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை 
மழை பெய்யும் போது இந்த சாலை சேறும் சகதியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் அமைந்துவிடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த இடையூறை சந்திக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அரிச்சந்திரா நதி வடகரையில் சின்ன குருவாடி பாலம் முதல் மஞ்சவாடி பாலம் வரை 1½ கிலோமீட்டர். தூரம் வரை சாலையை சீரமைத்து தார் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அரவிந்த் (பா.ஜனதா) திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Next Story