மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: மாமனார் மீது தாக்குதல்; மருமகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாமனாரை தாக்கிய மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள ஜவளகிரி கிராமத்தை சேர்ந்தவர் சென்னராஜ். இவரது மகள் சகானாவிற்கும், கர்நாடக மாநிலம் கொலகண்டப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சகானா தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜேஷ் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்து செல்வதற்காக உறவினர்களுடன் சென்றார். ஆனால் கணவருடன் செல்ல சகானா மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சென்னராஜை ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கினர். இது தொடர்பாக சென்னராஜ் தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ரஞ்சித் (29), குமார்(45), ரமேஷ் (35) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story