சின்னசேலம் அருகே விபத்து: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி உள்பட 7 பேர் காயம்


சின்னசேலம் அருகே விபத்து: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி உள்பட 7 பேர் காயம்
x
தினத்தந்தி 2 May 2022 10:13 PM IST (Updated: 2 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் நோயாளி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

சின்னசேலம், 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஏலகிரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மனைவி வனிதா. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வனிதா மேல்சிகிச்சைக்காக ஒரு ஆம்புலன்சில் சென்னை அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வனிதாவுடன் சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் பெருமாள், ராதா, பெரியம்மாள், பெரியண்ணன் ஆகியோர் உடன் சென்றனர். ஆம்புலன்சை ஈரோடு பவானி மெயின் ரோட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 24) என்பவர் ஓட்டினார். அந்த ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பாண்டியங்குப்பம் மேம்பாலத்தில் வந்தபோது, பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த வனிதா உள்பட 7 பேரும் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story