பராமரிப்பு பணி காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் 10-ந்தேதி ஓடுபாதைகள் மூடல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 2 May 2022 10:52 PM IST (Updated: 2 May 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வருகிற 10-ந்தேதி பராமரிப்பு பணி காரணமாக ஓடுபாதைகள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மும்பை, 
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வருகிற 10-ந்தேதி பராமரிப்பு பணி காரணமாக ஓடுபாதைகள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.
 பராமரிப்பு பணி
மும்பையில் வருகிற ஜூன் மாதம் முதல் பருவமழைக்காலம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு மும்பை மாநகராட்சி சார்பில் கால்வாய் மற்றும் வடிகால் தூர்வாரும் பணி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் நிறைவு செய்யும் படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
இதே போல மும்பை சர்வதேச விமான நிலையத்திலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான ஓடுபாதையில் வெள்ளநீர் தேங்காமல் இருப்பதற்காக பராமரிப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் வருகிற 10-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
மாலை 5 மணி வரை
இது பற்றி விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், மழைக்கால தற்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் வருகிற 10-ந்தேதி மூடப்படும். விமான நிலையத்தின் 14/32 மற்றும் 9/27 ஆகிய 2 ஓடுபாதைகள் பழுது பார்ப்பு பணிகளுக்காக செயல்படாமல் இருக்கும். 
பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் விமான பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து செயல்பாடுகளும் வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என்றார்.

Next Story