தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 May 2022 11:12 PM IST (Updated: 2 May 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள்பகுதி


 இரும்புக்குழாயால் இடையூறு

வேலூர் மாவட்டம் ஊசூர் வருவாய் அலுவலர் மற்றும் அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இரும்புக்குழாய் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வருவோர் இரும்புக்குழாயில் கால் இடறி கீழே விழுந்து விடுகின்றனர். வாகனங்கள் மாறிச் செல்வதற்கு இடையூறாக உள்ளது. ஒரு சில நேரத்தில் விபத்துகளும் நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரும்புக்குழாயை அகற்ற வேண்டும்.

  -வி.விக்னேஸ்வரன், கருகம்பத்தூர்.

மின்விளக்கு வசதி தேவை

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஸ் நிலையத்தில் நேர காப்பாளர் அலுவலகத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. கூடுதல் மின் விளக்கு வசதி செய்து கொடுத்தால் அலுவலர்களுக்கு வசதியாக இருக்கும். அதிகாரிகள் செய்வார்களா?
  -ஆட்டோ க.முத்து, போளூர்.

 சாலையில் ஓடும் கழிவுநீர்

  வேலூர் வசந்தபுரம் பகுதியில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து, வாகனங்களில் ெசல்வோர் சிரமப்படுகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளது. விஷ உயிரினங்கள் நடமாட்டமும் உள்ளது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. சாலையில் ஓடும் கழிவுநீரை கால்வாயில் வடிய வைக்க வேண்டும்.
  -ராஜா, வேலூர்.

மின்மாற்றி அமைத்துத்தர வேண்டும்

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தெள்ளூர் ஊராட்சி பெரிய தெள்ளூர் பாடசாலை தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் மின்விசிறிகள், பிரிட்ஜ், மின்விளக்குகள் ஆகியவை பழுதாகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எங்கள் கிராமத்தில் தனியாக ஒரு மின்மாற்றி அமைத்துத்தர ேவண்டும்.
  -சுப்பிரமணி, தெள்ளூர்.

தண்ணீர் இணைப்பு வழங்கப்படுமா?

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கை கழுவுவதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு, தண்ணீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
  -சுந்தரராஜன், வேலூர்.

குவளை இல்லாத குடிநீர் தொட்டி

  வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்க பட்டுள்ளது. குடிப்பதற்கு குவளை வைக்கப்படாதததால், பொதுமக்கள் கைகளில் தண்ணீரை ஏந்தி சிரமப்பட்டுக் குடிக்கின்றனர். குவளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -அழகர், வேலூர்.

ஆபத்தான மின்கம்பம்

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வடமாம்பாக்கம் கண்டிகை பகுதியில் விவசாய நிலங்களில் அங்காங்கே மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகிறது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
  -குமரன், அரக்கோணம்.

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து

  திருப்பத்தூரில் பல்வேறு தெருக்களில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது, மாடுகள் முட்டி காயம் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் திருப்பத்தூரில் நாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -பக்தவச்சலம், திருப்பத்தூர்.


Next Story