சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு


சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 May 2022 11:28 PM IST (Updated: 2 May 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கீழக்கரை
தென்னிந்திய அளவில் சென்னையில் நடைபெற்ற யூத் கேம்ப் சிலம்பம் போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை ஈசன் சிலம்ப பள்ளி ஆர்.கே. குழுவின் மாணவர்கள் ராஜரினித், பாண்டித்துரை, சக்தி வீரகணபதி, புவனேஸ்வரன், சிவ தருண், தில்லைராஜா, கபிலேஷ்சரன் ஆகியோர் முதல் பரிசு தங்கப்பதக்கத்தையும், சந்தோஷ் குமரன், சஞ்சய், முகிலன் ஆகியோர் 2-ம் பரிசாக வெள்ளிப் பதக்கத்தையும், பிரதாப், லோகேஸ்வரன், கதிர்வேல், பால ஹரிஷ், மோகித் சரண் ஆகியோர் மூன்றாம் பரிசாக வெண்கல பதக்கங்களை வென்றனர். இந்த மாணவர்களுக்கு கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் ஆகியோர் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

Next Story