தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 May 2022 11:29 PM IST (Updated: 2 May 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் வசதி இன்றி நோயாளிகள் அவதி 
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தண்ணீர் கிடைக்காமல், தண்ணீரை கடைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி நோயாளிகளை பயன்பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ரமேஷ், பெரம்பலூர்.

இயக்கப்படாத அரசு பஸ் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், புள்ளான்விடுதி கிராமத்திற்கு 21 என்ற எண் கொண்ட அரசு பஸ் ஆலங்குடி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது இந்த பஸ் இரவில் சரியாக இயக்கப்படாததால்  பொதுமக்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த பஸ்சை இரவு நேரத்தில் தினமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
திருமாறன், புள்ளான்விடுதி, புதுக்கோட்டை.

பயன்படாத அங்கன்வாடி மையம் 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு முன் பருவ கல்வியை அளிக்கவும், சத்தான உணவை வழங்கவும், கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் அரசு வழங்கும் பல்வேறு உதவிகளை பெற்று தரவும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் மூலம் செல்லாண்டிபுரம், குறளப்பன்பட்டி, வில்வமரத்துபட்டி, ராஜலிங்கபுரம் ஆகிய குக்கிராமங்களை சேர்ந்த குழந்தைகளும், கர்ப்பிணிகளும் பயன்பெற்று வருகின்றனர் . இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதியதாக 2018ம் ஆண்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயாரானது. ஆனால் இன்று வரை புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்லாண்டிபுரம், கரூர். 

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே திண்டுக்கல்- திருச்சி சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் இருந்த பள்ளத்தை சீர்செய்து தார் சாலை அமைத்தனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், திருச்சி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் சிலர் தெருக்களை ஆக்கிரமித்து கழிப்பறை, குளியலறை மற்றும் செடிகளை அமைத்துள்ளனார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வடகாபுத்தூர், திருச்சி. 

மின் விளக்கு அமைக்க வேண்டும் 
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை முதல் புதிய பஸ் நிலையம் பைபாஸ் ரவுண்டானா மற்றும் தந்தை பெரியார் பாலம் பைபாஸ் வரை சாலையின் நடுவில் தடுப்பு (சென்டர் மீடியன்) அமைக்கப்பட்டு இருவழி சாலையாக உள்ளது. இரவு நேரங்களில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு வாகன ஓட்டிகளுக்கு  தெரியாமல் இருள் சூழ்ந்து உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்தை தடுக்கும் வகையில், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில்   உழவர் சந்தை முதல் தந்தை பெரியார் பாலம் வரை மின் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராமதாஸ், முசிறி, திருச்சி. 

ஆபத்தான மின்மாற்றி 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், சுக்கம்பட்டி ஊராட்சி, தண்டலை கிராமத்தில் பழைய ரைஸ் மில் அருகில் மின்மாற்றி அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது  மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடையவும் அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
விவேக்,  தண்டலை, திருச்சி. 

குப்பை  கிடங்கால் மக்கள் அவதி 
திருச்சி, இனாம் சமயபுரம்- திருவள்ளுவர் போக்குவரத்து நகர் கரியமாணிக்கம்  சாலை பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அவ்வப்போது தீப்பற்றி எரிவதால் அவற்றில் இருந்து நச்சுப்புகை  வெளியேறுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இனாம் சமயபுரம், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டு ஏர்போர்ட்டில் இருந்து குளாப்பட்டி  செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  குளாப்பட்டி, திருச்சி. 


Next Story