சாக்கடை நீர் தெருவுக்குள் வந்ததால் பொதுமக்கள் மறியல் முயற்சி
சாக்கடை நீர் தெருவுக்குள் வந்ததால் பொதுமக்கள் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
க.பரமத்தி,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ஊராட்சி நேரு நகர் பகுதியில் சாக்கடை நீர் தெருவுக்குள் வந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரூர்- தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பரமேஸ்வரன், சின்னதாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 தினங்களுக்குள் இதனை சரி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story