அரசு கல்லூரியை இடமாற்றக்கூடாது


அரசு கல்லூரியை இடமாற்றக்கூடாது
x
தினத்தந்தி 3 May 2022 12:00 AM IST (Updated: 3 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

குடவாசலில் எம்.ஜி.ஆர். பெயரில் இயங்கி வரும் அரசு கல்லூரியை இடமாற்றக்கூடாது என்று கலெக்டரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவாரூர்;
குடவாசலில்  எம்.ஜி.ஆர். பெயரில் இயங்கி வரும் அரசு கல்லூரியை இடமாற்றக்கூடாது என்று கலெக்டரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார். 
கோரிக்கை மனு
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் நன்னிலம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சென்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசலில் 2017-ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த ஆட்சியின் போது இக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதால் நீதிமன்ற உத்தரவால் தாமதமானது. இதனால் தற்போது டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இடமாற்றக்கூடாது
இக்கல்லூரியை வேறு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு முயற்சி நடப்பதாக தெரிகிறது. இந்த கல்லூரி குடவாசல் பகுதியில் ஏழை மக்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கு அமைக்கப்பட்ட கல்லூரியாகும். இக்கல்லூரியை இடம்மாற்றம் செய்தால் தற்போது பயின்றுவரும் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இந்த கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி பல அரசியல் கட்சிகளும், பொதுநல சங்கங்களும் தொடர்ந்து அறப் போராட்டங்களின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இந்த கல்லூரியை இடமாற்றம் செய்யாமல் குடவாசல் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட ஆவண செய்ய வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலம்
அப்போது ஒன்றியகுழுத் தலைவர்கள் வலங்கைமான் சங்கர், குடவாசல் கிளாரா செந்தில், நன்னிலம் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.  பாப்பா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
இந்த மனுவில் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. மற்றும் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இந்த மனுவை தமிழக முதல்-அமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல்  மூலம் அனுப்பியுள்ளனர

Next Story