மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கரூர்,
காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மாட்டுவண்டி மணல் குவாரிகளை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு உரிமம் வழங்கிட வேண்டும். மணல் மாட்டுவண்டிகளுக்கு முந்தைய கட்டணத்தையே நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story