அறந்தாங்கி அருகே வெறிநாய் கடித்த பசுமாட்டை மயக்க மருந்து ெசலுத்தி பிடித்தனர்
வெறிநாய் கடித்த பசுமாட்டை மயக்க மருந்து ெசலுத்தி பிடித்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தில் பசுமாட்டை வெறிநாய் கடித்தது. இதையடுத்து அந்த பசுமாடு 2 நாட்களாக வெறிப்பிடித்து சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும், கால்நடைகளை துரத்தி துரத்தி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இதுகுறித்து அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறை, கால்நடைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம இளைஞர்களின் துணையோடு நேற்று வெறிப்பிடித்த பசுமாட்டை மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story