விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2022 12:28 AM IST (Updated: 3 May 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி:
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்படி (தமிழ்நாடு அர்பன் எம்பிளாய்மெண்ட் ஸ்கீம்) பொன்னமராவதி பேரூராட்சியை இணைத்து பேரூராட்சி பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே ஒன்று கூடி பொன்னமராவதி நகர்ப்பகுதிகளில் வசிக்கக்கூடிய 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது தமிழக அரசு அறிவித்த படி நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டு சென்றனர். பின்னர் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது அவர், பொன்னமராவதி பேரூராட்சிக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டால் அத்திட்டத்தின் மூலமாக உங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

Next Story