கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கல்லிடைக்குறிச்சியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர் திருடி சென்றார்.
அம்பை:
கல்லிடைக்குறிச்சியில் மிகவும் பழமையான சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் கோவிலில் இரவு 12 மணி வரை பக்தர்களும், நிர்வாகத்தினரும் இருந்து விட்டு பின்னர் கோவிலை அடைத்து விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவிலின் வெளியே அமைக்கப்பட்டுள்ள உண்டியல் உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கல்லிடைக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கடப்பாரை கம்பியுடன் மர்மநபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story