கருணைக்கொலை செய்யக்கோரி 2 மகள்களுடன் வந்து பெற்றோர் மனு

திருச்சி, மே.3-
திருச்சி கிராப்பட்டி கான்வெண்ட் ரோட்டை சேர்ந்தவர் ரவி (வயது 51). ஓட்டல் ஊழியர். இவர் நேற்று தனது மனைவி விஜயராணி (39), மகள்கள் ரேணுகா (18), பிரித்தி ஆகியோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், அவர் அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் எஸ்.சிவராசுவிடம், தங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கத்தார் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 2010-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக தொடர்ந்து வேலைபார்த்தேன். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் கொடுத்தனர். அங்கு எனக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக ஓட்டல் அதிபரிடம் சொல்லிக்கொள்ளாமல் சொந்த ஊரான திருச்சிக்கு வந்து பழைய வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். இந்த நிலையில் நான் ரூ.1 கோடியை திருடிக்கொண்டு வந்து விட்டதாக ஓட்டல் அதிபர், வணிகர் சங்க நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் என்னை கடத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து மிரட்டினர். இதனால் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொடுத்தேன். மேலும் வெற்றுப்பேப்பர்களிலும் கையெழுத்து பெற்றனர். உண்மையில் நான் யாரிடம் சொல்லாமல் வந்ததுதான் குற்றம். ரூ.1 கோடி திருடவில்லை. இது குறித்து திருச்சி மகிளா கோர்ட்டில் மனு கொடுத்ததன் பேரில், இ.பி.கோ. சட்டத்தின்கீழ் 15 பிரிவுகளின் கண்டோன்மெண்ட் போலீசார், ஓட்டல் அதிபர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது, அவர்கள் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனவே, மிகுந்த மன உளைச்சலில் உள்ள எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story