145 கிளிகள் வனப்பகுதியில் பறக்கவிடப்பட்டன

திருச்சி, மே.3-
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, வீடுகளின் முன்பு விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட பச்சை கிளிகள், 100-க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இறக்கை வெட்டப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் இறக்கை வளர்ந்த பின்பு வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்து இருந்தனர். அதன்படி மீட்கப்பட்ட 145 கிளிகள் அடர் வனப்பகுதியில் பறக்கவிடப்பட்டன.

Related Tags :
Next Story