திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 701 பேர் கைது


திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட  5 ஆயிரத்து 701 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2022 1:04 AM IST (Updated: 3 May 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 701 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, மே.3-
திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட  5 ஆயிரத்து 701 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறி, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டதாக கடந்த  2020-ம் ஆண்டு 40 ேபர் மீதும், 2021-ம் ஆண்டு 85 ேபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் 62 ேபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த 60 ேபர் மீதும்,  பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 290 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 13 ரவுடிகள் உள்பட 18 ேபர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் எச்சரிக்கை
மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 296 ேபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 4 ஆயிரத்து 429 ேபர் என மொத்தம் 5 ஆயிரத்து 701 பேரை கைது செய்து அவர்கள் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட குறைவு
திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story