பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 3 May 2022 1:06 AM IST (Updated: 3 May 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

காரைக்குடி,
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சித் தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியை சாவித்திரி தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மற்றும் பொன்னுசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் பிலோமினாள், அஞ்சலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக கிருபா ராணி உள்ளிட்ட 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்களால் தேர்வு செய்யப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியை அற்புதமேரி நன்றி கூறினார். கூட்டத்தில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையை அடுத்த மானாகுடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. சக்கந்தி ஊராட்சி ஒன்றியம் உறுப்பினர் பத்மாவதி, மானாகுடி வார்டு உறுப்பினர் சாரதி முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் உதய ராணி  வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு மாவட்ட பார்வையாளர் சாஸ்தா சுந்தரம் தேர்ந்து எடுக்கபட வேண்டிய உறுப்பினர்கள் பற்றிய விதி முறைகள், அவர்கள் பள்ளிக்கு செய்ய வேண்டிய செயல்பாடுகள் பற்றி கூறினார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக ஜனனி, துணைத்தலைவராக சர்மிளா உள்பட 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story