கோவில் பணியாளர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதை கைவிட கோரிக்கை

ஸ்ரீரங்கம், மே.3 -
தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் கிளை தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சுதர்சனம், செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பதவி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் நலன் குறித்து பேசினர். கூட்டத்தில் கோவில் பணியாளர்களை புதியதாக ஏற்படுத்தப்பட்ட பணி விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தன்னிச்சையாக பணியிட மாறுதல் செய்வதை உடனடியாக கைவிட வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் பணியாளர் சங்க நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story