பட்டாசு ஆலை ஊழியர் மர்ம சாவு


பட்டாசு ஆலை ஊழியர் மர்ம சாவு
x
தினத்தந்தி 3 May 2022 1:13 AM IST (Updated: 3 May 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள கோட்டநத்ததை சேர்ந்தவர் சரவண முருகன் (வயது 36). இவரது மனைவி ராஜலட்சுமி (26). இவர்கள் இருவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சரவண முருகன் வீட்டிற்கு சரியாக வருவதில்லை. இதனை ராஜலட்சுமி கண்டித்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. சரவண முருகன் ஆர்.ஆர்.நகரில் ஒரு கடை முன்பு படுத்து கிடப்பதாக உறவினர் ஒருவர் ராஜலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இரவு வெகு நேரமாகியும் சரவணமுருகன் வீடு திரும்பாததால் ராஜலட்சுமி அங்கு சென்று பார்த்தார். அப்போது சரவண முருகன் அதே இடத்தில் படுத்து கிடந்தார். ராஜலட்சுமி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர், சரவண முருகனை பரிசோதித்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சரவணமுருகனின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து   ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story