பணகுடி புனித சூசையப்பர் ஆலய தேர்ப்பவனி


பணகுடி புனித சூசையப்பர் ஆலய தேர்ப்பவனி
x
தினத்தந்தி 3 May 2022 1:39 AM IST (Updated: 3 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி புனித சூசையப்பர் ஆலய தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பணகுடி:
பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் காலை பாடல் திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 8-ம் திருவிழா அன்று மாலை நற்கருணை பவனியும், 9-ம் திருவிழா அன்று இரவு 10 மணிக்கு தேர்பவனியும், சிறப்பு மாலை ஆராதனையும் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஆடம்பர பாடல் திருப்பலி, மதியம் தேர்ப்பவனி நடந்தது. மாலை 6.30 மணிக்கு தேர் ஆலய வளாகம் வந்தது. அதன் பின்னர் தேரில் வைத்து சிறப்பு நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புனித சூசையப்பர் ஆலய பங்குகுரு இருதயராஜ், ஊர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.

Next Story