சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம்
x
தினத்தந்தி 3 May 2022 1:50 AM IST (Updated: 3 May 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம்

சமயபுரம், மே.3-
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வந்து செல்கின்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தபடி சமயபுரம் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவில் தெற்கு ரதவீதியில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட இந்த மையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு  மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து  நோயாளிகளுக்கு டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்ததை அமைச்சர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் 3 படுக்கை வசதிகள் உள்ளன. காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மருத்துவ உதவி மையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story