அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை


அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 3 May 2022 1:58 AM IST (Updated: 3 May 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

தாமரைக்குளம்:
சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய மாவட்ட அலுவலரின் அறிவுரையின்படி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது? என்றும், தீயணைப்பான்களை எப்படி உபயோகிப்பது? என்பது பற்றியும் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story