மேலும் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கைதான மேலும் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:
சிறுமியை பாலியல் தொழிலில்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 12 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 4 பேர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சாந்தா(வயது 30), கீழப்பழுவூரை சேர்ந்த பால்ராஜின் மனைவி சந்திரா(38), அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி இந்திரா(40), முத்துவாஞ்சேரி உரைக்கடைத் தெருவை சேர்ந்த பிரேம்(38), கீழப்பழுவூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் வெற்றிக்கண்ணன்(32), திருமானூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த மருதமுத்துவின் மகன் தெய்வீகன்(20), அரியலூர் அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ்குமார்(41) ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அதன்பேரில் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தா, சந்திரா, இந்திரா, பிரேம், மனோஜ்குமார், வெற்றிக்கண்ணன், தெய்வீகன் ஆகியோரிடம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழங்கினார்.
Related Tags :
Next Story