கள்ளக்காதலியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி


கள்ளக்காதலியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 3 May 2022 2:09 AM IST (Updated: 3 May 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

உன்சூர் அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு வந்த நிலையில் பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு: உன்சூர் அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு வந்த நிலையில் பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 

தொழிலாளி

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா திப்பூர் கிராமத்தில் 12 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இதேபோல் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் காளநாயக்கா(வயது 46). தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் பிள்ளைகள்  உள்ளனர். 

இதற்கிடையே காளநாயக்காவுக்கு திப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். இதையடுத்து காளநாயக்காவை போலீசார் கைது செய்தனர். 

கள்ளக்காதலி வீட்டிற்கு...

கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் காளநாயக்காவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட காளநாயக்கா, 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலை ஆனார். 

அதன்பிறகும் காளநாயக்கா திப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளதொடர்பை நீட்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காளநாயக்கா, கள்ளக்காதலி வீட்டிற்கு வந்துள்ளார். 

 சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி

அப்போது அவர், பக்கத்து வீட்டை சேர்ந்த 12 சிறுமியை பார்த்து மோகம் கொண்டுள்ளார். இதையடுத்து அவர், சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தின்பண்டம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

இதனால் பயந்துபோன சிறுமி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், இளைஞர்கள் ஓடிவந்தனர். அப்போது அவர்களுக்கு சிறுமியை, காளநாயக்கா பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. 

 கம்பத்தில் கட்டி தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காளநாயக்காவை பிடித்து தர்ம-அடி கொடுத்து அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். 
இதுபற்றி தகவல் அறிந்த பிளிகெரே போலீசார் விரைந்து வந்து காளநாயக்காவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story