ரெயில் என்ஜினை நிறுத்தி, பசுமாட்டை விரட்டிய டிரைவர்
ரெயில் என்ஜினை நிறுத்தி, பசுமாட்டை விரட்டிய டிரைவர் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மதுரை,
மதுரை-தேனி அகல ரெயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமானது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பழங்காநத்தம்-மாடக்குளம் இணைப்பு ரெயில்வே கேட் வழியாக மதுரையில் இருந்து தேனி நோக்கி என்ஜினை இயக்கி சோதிப்பதற்காக ரெயில்வே கேட் அடைக்கப்பட்டது.
அந்த ரெயில்வே கேட்டில் இருந்து சிறிது தூரத்தில் பசுமாடு ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது, இதனை சற்று தூரத்திலேயே கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர், வேகத்தை குறைத்து ஹாரன் கொடுத்தபடியே சென்று கொண்டிருந்தார். இருப்பினும் பசுமாடு தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தது.
உடனடியாக அவர் என்ஜினை நிறுத்தி, கீழே இறங்கினார். பின்னர் பசுமாட்டை சத்தம் போட்டு விரட்டினார். அதன் பிறகு ரெயில் என்ஜினில் ஏறி இயக்கியதை தொடர்ந்து, அந்த என்ஜின் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து, இந்த காட்சிகள் பரவி வருகின்றன.
Related Tags :
Next Story