குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில், சமூக சேவை அமைப்பை நடத்தி வருபவர் சக்திகாந்த் (வயது 47). இவர், தனக்கு சொந்தமான அலிவலம் கிராமத்தில் உள்ள நிலத்தில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து பல இடங்களில் நட்டு வைத்து பராமரித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒருவருக்கு அதிகாரிகள் முறைகேடாக பட்டா வழங்கி விட்டதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரியும் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி மற்றும் 2 குழந்தைகள், நண்பர்கள் உள்பட 9 பேருடன் சக்திகாந்த் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டுத் தராவிட்டால் சென்னைக்கு குடும்பத்துடன் சென்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப் போவதாகவும் கூறினார். அவரிடம் பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் சக்திகாந்த் அவருடைய தந்தை குருநாதபிள்ளை (80), சகோதரி லலிதா (53) மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story