ஈரோட்டில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி; 280 பேர் பங்கேற்பு
ஈரோட்டில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் 280 பேர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோட்டில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் 280 பேர் பங்கேற்றனர்.
தடகள விளையாட்டு
பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி ஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘கொரோனா தொற்று காரணமாக இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. விளையாட்டு போட்டிகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் அவர்களின் திறன் மேம்படுகிறது. மாணவர்கள் தங்களுடைய நண்பர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும்போது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றார்.
280 பேர் பங்கேற்பு
முன்னதாக 14 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த மாணவ -மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். பின்னர் வீரர் -வீராங்கனைகள் விளையாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட பந்தையம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. ஈரோடு வட்டார அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இதில் முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story