குளத்தில் சிறுவன் பிணம்


குளத்தில் சிறுவன் பிணம்
x
தினத்தந்தி 3 May 2022 3:16 AM IST (Updated: 3 May 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் சிறுவன் பிணமாக மிதந்தான்

தஞ்சாவூர்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவருடைய மகன் முகமதுயூசுப் (வயது17). வீட்டை விட்டு வெளியே சென்ற இவனை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இந்தநிலையில் தஞ்சையை அடுத்த சூரியம்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குளிப்பதற்காக சென்றனர். அப்போது குளத்தில் சிறுவன் ஒருவன் பிணமாக மிதந்து கொண்டிருந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று குளத்தில் பிணமாக மிதந்த சிறுவனின் உடலை மீட்டனர்.
 அந்த சிறுவன் யார்? என போலீசார் விசாரணை நடத்தியபோது, அவன் முகமதுயூசுப் என்பது தெரியவந்தது. பின்னர், அவரது பெற்றோரை போலீசார் வரவழைத்து குளத்தில் பிணமாக மிதந்தது முகமது யூசுப் தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சிறுவன் குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story