சேலத்தில் சலவை கூடம் நடத்தஇடம் வாடகைக்கு விட்ட நபரிடம் ரூ.7.20 லட்சம் அபராதம் வசூல்-மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை


சேலத்தில் சலவை கூடம் நடத்தஇடம் வாடகைக்கு விட்ட நபரிடம் ரூ.7.20 லட்சம் அபராதம் வசூல்-மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 May 2022 3:45 AM IST (Updated: 3 May 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சலவை கூடம் நடத்தஇடம் வாடகைக்கு விட்ட நபரிடம் ரூ.7.20 லட்சம் அபராதம் விதித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் சாயப்பட்டறை மற்றும் சலவை கூடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சேலம் பள்ளப்பட்டி பகுதியில் ஈஸ்வரன் பிளீச்சிங் என்ற சலவை கூடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர இயக்காமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சலவை கூடத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாசு கட்டுப்பாடு வாரியத்தால் சம்பந்தப்பட்ட சலவை கூடத்திற்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், சலவை கூடத்தை இயக்கி வந்தவர், அதை காலி செய்துவிட்டார். இதனால் இடத்தை வாடகைக்கு விட்ட இடத்தின் உரிமையாளரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, சாய மற்றும் சலவை கூடங்களை வாடகைக்கு விடுபவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் அபராத தொகை செலுத்த நேரிடும் என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story