சேலத்தில் 2 கடைகளில் ரூ.1 லட்சம் மின்சாதன பொருட்கள், பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் 2 கடைகளில் ரூ.1 லட்சம் மின்சாதன பொருட்கள், பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 May 2022 4:13 AM IST (Updated: 3 May 2022 4:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2 கடைகளில் ரூ.1 லட்சம் மின்சாதன பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்:
சேலத்தில் 2 கடைகளில் ரூ.1 லட்சம் மின்சாதன பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மின்சாதன பொருட்கள்
சேலம் வீரபாண்டி ராஜா வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 30). இவர் குகை பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வயர்கள், கண்காணிப்பு கேமரா மற்றும் உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. 
இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பால் பொருட்கள் விற்பனை
இதே போன்று சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் தங்கராஜ் (61). இவர் அந்த பகுதியில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.22 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Next Story