கன்டெய்னர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
கன்டெய்னர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
இளம்பிள்ளை:
கோவை சந்திராபுரத்தை சேர்ந்தவர்கள் தரண்குமார் (வயது 22), ஆல்வின் (21), ஜனார்த்தனன் (36), உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சர்வண்குமார் (23). தொழிலாளர்கள். இவர்கள் 4 பேரும் ஒரு சரக்கு வாகனத்தில் கோவையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை தரண்குமார் ஓட்டிச்சென்றார். ஆல்வின் டிரைவருக்கு அருகில் அமர்ந்து இருந்தார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி அருகே அ.தாழையூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது சரக்குவாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆல்வின் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story