சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 3 May 2022 5:06 AM IST (Updated: 3 May 2022 5:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
எடப்பாடி அருகே இருப்பாளி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (68). இவர்கள் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், கணவன், மனைவியை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து தங்கராஜ் கூறுகையில், எனது பெற்றோருக்கு 10 ஏக்கரில் நிலம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய், தந்தை ஆகியோர் இறந்துவிட்டனர். தம்பி மற்றும் மனைவி ஆகியோர் அரசியல் கட்சியில் உள்ளனர். இதனால் அதிகாரத்தை பயன்படுத்தி 3 ஏக்கர் நிலத்தை அவர்கள் எழுதி வாங்கிகொண்டனர். மீதமுள்ள நிலத்தில் எங்களை அனுமதிக்காமல் மிரட்டி வருகின்றனர். தற்போது வாழ்வதற்கு கூட இடம் இல்லாமல் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். நில அபகரிப்பு குறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story