விதிமுறையை மீறி ‘நம்பர் பிளேட்’: 812 வாகன ஓட்டிகள் மீது வழக்கு


விதிமுறையை மீறி ‘நம்பர் பிளேட்’: 812 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 May 2022 11:56 AM IST (Updated: 3 May 2022 11:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் விதிமுறையை மீறி நம்பர் பிளேட்களை பொருத்திருந்த 812 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை,

சென்னை நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மடக்கி வைக்கும் நம்பர் பிளேட்டை சில வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு எதிராக விதவிதமான வடிவில் ‘நம்பர் பிளேட்’கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக ‘நம்பர் பிளேட்’களை மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருந்தது தொடர்பாக 812 வாகன ஓட்டிகள் மீதும், மடக்கி வைக்கும் நம்பர் பிளேட்டை பயன்படுத்திய 9 வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ‘நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தியதற்காக 215 வாகன ஓட்டிகள் மீதும் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சிறப்பு வாகன சோதனை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story