பாக்கெட் குளிர்பானம் குடித்த 18 தொழிலாளர்கள் திடீர் மயக்கம்
பாக்கெட்டில் விற்கப்படும் குளிர்பானத்தை குடித்த விவசாய கூலி தொழிலாளர்கள் 18 பேர் திடீர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆரணி
பாக்கெட்டில் விற்கப்படும் குளிர்பானத்தை குடித்த விவசாய கூலி தொழிலாளர்கள் 18 பேர் திடீர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாற்று நடவு பணி
ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் பகலில் நாற்று நடவு பணி நடந்தது. விவசாய கூலி தொழிலாளர்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.
அவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டீ, காபி போன்றவை கடைகளிலிருந்து பலகாரத்துடன் வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால் காலை 10 மணிக்கே ெவயில் சுட்டெரிப்பதால் இப்போது அவர்களுக்கு குளிர்பானங்களை விவசாயிகள் வழங்குகின்றனர்.
அதன்படி குமரேசன் வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, அனைத்து பழங்கள் கலந்த ‘புரூட் ஜூஸ்’ பாக்கெட்டுகள், களம்பூரில் தயாளன் என்பவரின் ஜூஸ் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.
மயக்கம்
அதனை ரசித்து குடித்த தொழிலாளர்கள் மாலைவரை வேலை பார்த்து விட்டு வீடு திரும்பினர். நேற்று காலை பணிக்கு வந்தபோது பாக்கெட் ஜூஸ் குடித்த மல்லிகா, குமரேசன், சிவரஞ்சினி, தமிழ்ச்செல்வி, கன்னியம்மாள், பூங்காவனம், ரேவதி, ஜெயா, மகாலட்சுமி, விசாலாட்சி, பவுன், சன்னி, கவுரி, மாலதி, மஞ்சுளா, சுமதி, மற்றும் சிறுவர்கள் சஞ்சய், கீர்த்திகா உள்பட 18 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது.
சிலர் தலை சுற்றலுடன் வாந்தி எடுத்தனர். உடனடியாக அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.பார்வையிட்டார்
இது குறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகர், குளிர்பானம் வாங்கப்பட்டதாக கூறப்படும் களம்பூர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த தயாளன் கடையில் விசாரணை நடத்தி வருகிறார்.
தகவலறிந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி தாசில்தார் கா.பெருமாள் ஆகியோர நேற்று பிற்பகல் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்த்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். டாக்டர்களிடம் தேவையான சிகிச்சை வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

===========
Related Tags :
Next Story