பொன்னேரி நகர்மன்ற கூட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம்
பொன்னேரி நகர்மன்ற கூட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொன்னேரி நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் குடிநீர் குழாய்களில் பழுதுகளை நீக்கம் செய்வதற்கு தேவையான உதிரிபாகங்களை வாங்குவது, டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுவதற்கு 2 புகை எந்திரங்கள் வாங்குவது, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது, கால்வாய் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் நீலகண்டன், யாகோப், உமாபதி, தனுஷாதமிழ்குடிமகன், நல்லசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story