தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
தூத்துக்குடி, காயல்பட்டினம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நேற்று பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்களில் குவிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, காயல்பட்டினம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நேற்று பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்களில் குவிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களில் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது வழக்கம் ஆகும். அதன்படி கடந்த மாதம் 3-ந் தேதி முஸ்லிம் மக்கள் நோன்பை கடைபிடிக்க தொடங்கினர்.
நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பு உணவு அருந்தி விட்டு சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பார்கள்.
ரம்ஜான் மாதத்தின் கடையில் பிறை தெரியும் நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சிறப்பு தொழுகை
தூத்துக்குடி மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டுதூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று காலையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் அப்துல் அலீம், ஷேக் உஸ்மான், சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். உலகில் வாழக்கூடிய அனைத்து மக்களும் கொரோனா போன்ற பெரும்நோய் தொற்றில் இருந்து காக்கப்பட வேண்டும், அமைதியாக வாழ வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் சிறப்பு "துவா" பிரார்த்தனை செய்தார்
இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த ரமலான் சிறப்பு தொழுகை 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பள்ளிவாசல்களில் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
காயல்பட்டினம்
காயல்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையினை காயல்பட்டினம் பெரிய நெசவு தெரு பள்ளிவாசல் இமாம் அபூசலாம் நடத்தினார்.
தொடர்ந்து குத்பாப் பேருரையினை கல்லிடைக்குறிச்சி மௌலவி யாஸிர் நடத்தினார். தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் மக்கீன் பொருளாளர் ஜப்பான் சுலைமான் மற்றும் நிர்வாகிகள் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்பு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தவ்ஹீத் பேரவை
இதேபோல் காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை சார்பில் காயல்பட்டினம் எல்.எப் ரோடு ஜெய்லானி நகரில் திறந்தவெளி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நோன்பு பெருநாள் தொழுகையை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை பள்ளிவாசல் இமாம் சுபி ஹூசைன் நடத்தினார்.தொடர்ந்து பெருநாள் உரையினை கோவை பக்கீர் முகமது நடத்தினார். இதில் காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை தலைவர் முத்துஹனிபா, செயலாளர் சஹானா லெப்பை பொருளாளர் ரய்யான் சாகுல் ஹமீது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குருவித்துறை பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதனை செய்யது முகமது முகம்மது சாகிபு நடத்தினார். தொடர்ந்து பெருநாள் பிரசங்கத்தினை பாதுல்அஸ்ஹாப் நடத்தினார்.
இந்த தொழுகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முத்து ஹாஜி, பாக்கர் ஹாஜி, நூஹீசாகிப், மௌலவி ஹபீப் ரஹ்மான், முஹம்மது நூஹூ காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல்அஸ்காப், அ.தி.மு.க. நகர செயலாளர் காயல் மவுலானா, நாம் தமிழர் கட்சி செயலாளர் சாலிக், வக்கீல் அபூபக்கர், மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.
பெண் தைக்காக்கள்
இதேபோல் காயல்பட்டினத்தில் உள்ள முக்கிய பள்ளிவாசல்கள் ஆன தாயும் பள்ளி, காட்டு தைக்கா பள்ளி, அருஷியா பள்ளி, புதுப்பள்ளி, முகைதீன் பள்ளி, ஆறாம் பள்ளி, கடை பள்ளிவாசல், அப்பா பள்ளி, தாயும் பள்ளி, குருவித்துறை பள்ளி, இரட்டை குளத்து பள்ளி, மேல பள்ளி, இரட்டைகுளத்து பள்ளி, மொட்டை யார் பள்ளி, உட்பட 35 பள்ளிவாசல்கள், மற்றும் 40 பெண்கள் தைக்காகளிலும் காலை ஒன்பதரை மணியளவில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டு தொழுகைக்குப் பின்பு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பஜாரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கோவில்பட்டி
கோவில்பட்டி சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக, சாலைப்புதூர் ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை மௌலவி முகமது அலி நடத்தினார். நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் ஹூமாயூன், செயலாளர் நிஜாம், பொருளாளர் நசீர் மற்றும் ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூம்ஆ குத்பா தொழுகைப் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு, ரமலான் பண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
Related Tags :
Next Story