கோவிந்தம்மாள் ஆதித்தனர் கல்லூரியில் கணிதவியல் மன்றக்கூட்டம்
கோவிந்தம்மாள் ஆதித்தனர் கல்லூரியில் கணிதவியல் மன்றக்கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் மன்றக் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர்பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். முதுகலை முதலாமாண்டு மாணவி பா.பெரில் பாப்ஸி வரவேற்று பேசினார். புனித சவேரியார்கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை பிலோ, மாணவிகளிடத்தில் பேராசிரியர் தகுதித்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது பற்றி விளக்கி கூறினார். முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ந.அஞ்சலி நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மா.கலைச்செல்வி, மு.கனகா ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் 458-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். இதையொட்டி நடந்த கருத்தரங்கில், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஆங்கிலத்துறை பேராசிரியை ராமஜெயலட்சுமி கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “ஷேக்ஸ்பியர் நாடகங்கள் காலாவதியானவையா? இல்லை இன்னும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டு அழியாமல் இருக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆங்கிலத்துறை இலக்கிய பேரவை தலைவி செரின் சத்யா வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவி ஆண்டாள் மற்றும் அத்துறையை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஹம்சா ஸ்ரீசக்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story